விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 18, 2025,03:13 PM IST

சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக்கோரி தவெக தொடர்ந்த வழக்கில் அனைத்துகட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.


2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சியில் முதன்முறையாக விஜய் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். திருச்சி நகருக்குள் உள்ள மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து இரவில் அரியலூரில் விஜய் பிரச்சாரம் செய்தார். நேரமின்மை காரணமாக பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்திற்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. 




திருச்சியில் நடந்த பிரச்சாரத்தின் போது தவெகவிற்கு 23 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அடுத்து நடைபெறவுள்ள பிரச்சாரங்கள் சிலவற்றுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தவெக தலைவர் விஜய் நடத்தும் பிரச்சாரங்களுக்கு அனுமதி கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,  தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?தொண்டர்களை கட்சி தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொதுச்சொத்தை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்க விதிகளை வகுக்க உத்தரவிடப்பட்டது. அனைத்துகட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

news

துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?

news

இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்