சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!

Apr 01, 2023,10:46 AM IST

சென்னை:  சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்வது நிற்காமல் தொடர்கிறது. நேற்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெயர் சச்சின் குமார் ஜெயின். 31 வயதான இவர் வேளச்சேரியில் தங்கி பிஎச்டி படிப்பை தொடர்ந்து வந்தார். அவருடன் தேவ்குஷ், தேவராஜ் ஆகிய மேலும் இரு பிஎச்டி மாணவர்களும் தங்கியிருந்தனர்.



கடந்த 3 மாதமாக இவர்கள் இந்த வீட்டில்தான் தங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல 3 பேரும் ஐஐடிக்கு சென்றுள்ளனர்.  வகுப்பு முடிவதற்கு முன்பாகவே சச்சின் சீக்கிரமே கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டார். பிற்பகலில் வீடு திரும்பிய அவர் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னால் சரியாக படிக்க முடியவில்லை. ஸாரி என்று போட்டுள்ளார். பின்னர் அதை தனது நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவரது ஸ்டேட்டஸைப் பார்த்த தேவ்குஷ் உடனடியாக வீட்டுக்கு விரைந்தார். அங்கு மயக்க நிலையில் சச்சின் கிடக்கவே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வாரங்களுக்கு முன்புதான் 20 வயதான வைப்பு புஷ்பக் ஸ்ரீசாய் என்ற ஆந்திர மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.  ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்டீபன் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல இன்னொரு மாணவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஐஐடியில் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருவதை அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்