சென்னை: தற்போது உருவாகும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரித்தால் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அதேபோல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அணைகளும் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதற்கிடையே நாளை மீண்டும் தெற்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மீதமுள்ள அணைகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 90 அணைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், ஆகிய ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்புகள் அதிகரித்து வருகிறது.
சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம் பின்வருமாறு:
பூண்டி நீர்த்தேக்கம்:
மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 34.66 அடி (3034 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு 10,300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 16,527 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செங்குன்றம்
மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 19.72அடி (2956 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு வரும் 709 கன அடி தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
சோழவரம்
மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 7.85 அடி (305 மில்லியன் கன அடி)
ஏரிக்கு 232 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம்
மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 22.76(3315 மில்லியன் கன அடி)
தற்போது ஏரிக்கு 200450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 4633 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை:
மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 31.95 அடி ( 353 மில்லியன் கன அடி)
தேர்வாய் கண்டிகை ஏரிக்கு தற்போது 250 மில்லியன் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}