சென்னை: சென்னை ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தையை 4 மணி நேரத்தில் விரைந்து மீட்டு அசத்தியுள்ளனர் சென்னை போலீஸார்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளிலிருந்து குழந்தைகள் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கும். காரணம், கண்காணிப்பு சரியாக இல்லாத குழந்தைகளை திருடுவதற்கென்றே பல கும்பல்கள் உள்ளன. பெரும்பாலும் பெண்கள் அல்லது வயதானவர்கள்தான் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதுதான் இந்த கடத்தல் கும்பல்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக் ஆகும். இவர்கள் நேக்காக குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதாலும், யாருக்கும் சந்தேகம் வராது என்பதாலும் இதுதான் கடத்தல் கும்பல்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக் ஆக உள்ளது.
இப்படித்தான் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஒடிசாவில் இருந்து நந்தினி கண்காகர்-லாங்கேஸ்வர் தம்பதியினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்திலேயே தங்களது ஒரு வயது குழந்தையுடன் தங்கினர். நள்ளிரவில் விழித்து பார்த்த தம்பதியினர் குழந்தையை காணாமல் தேடியுள்ளனர். அங்கும் இங்குமாக தேடியும், குழந்தை கிடைக்காத காரணத்தினால் பதற்றமடைந்த தம்பதியினர் உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் உடனடியாக ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிந்திருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சிசிடிவி புட்டேஜில் ஒடிசா தம்பதியிந் குழந்தையை இருவர் கடத்தியது தெரியவந்ததது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
கிட்டத்தட்ட 4 மணி நேர தேடுதலுக்கு பின் குழந்தையை கண்டுபிடித்து விட்டனர் குன்றத்தூர் பகுதியில் வைத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்தி வந்தது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}