சென்னை: சென்னைக்கு வெகு அருகே புயல் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று நள்ளிரவு வரை மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
சென்னையை உலுக்கி வரும் மழை எப்போது நிற்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் புதுத் தகவல் கூறியுள்ளார். அதில், நள்ளிரவு வரை மழை நீடிக்கலாம் என்று கூறியுள்ளார். இது ஏற்கனவே நீரில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு மேலும் அயர்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது.
இதுகுறித்து பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள புதிய தகவல்:

மிச்சாங் புயல் பொன்னேரி - ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் வியாபித்து நிற்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் - காவாலி இடையே நாளை புயல் கரையைக் கடக்கும். புயல் அருகே இருக்கும் வரை நமக்கு மழை குறையாது. குறைந்தது இன்று நள்ளிரவு வரை நாம் காத்திருக்க வேண்டி வரும். புயலின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் பெரும் திரளாக மேகங்கள் கூடியுள்ளன. புயல் நமக்கு அருகே இருப்பதால் மேலும்
மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. செங்குன்றம் ஏரிக்கு 4000 கன அடி நீர் கூடுதலாக வந்து கொண்டிருக்கிறது. பூண்டி அணைக்கு 6000 கன அடி நீர் வருகிறது, செம்பரம்பாக்கமும் புல்லாக உள்ளது. அங்கு 6000 கன அடி நீர் வருகிறது. சோழவரம் ஏரியிலும் 3000 கன அடி நீர் உபரியாக வருகிறது.
கடந்த 30 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் 380 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 360 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு
ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்
ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது
இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்
மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!
House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து
நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!
சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை
தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை
{{comments.comment}}