சென்னை: சென்னை மற்றும் புறநகரில் உள்ள 17 தனியார் பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற மிரட்டல் விடும் விஷமிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலர் குமுறல் வெளியிட்டுள்ளனர். இந்த விஷமிகளால் இன்று காலை சென்னையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டு விட்டது.
சென்னை அண்ணா நகர், பாரி முனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலை புரம், திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளி பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் ஒரே முகவரியிலிருந்து மர்ம நபர்களால் காலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்லுமாறு வாட்ஸப், மெசேஜ் மற்றும் இமெயில் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட தனியார் பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனைகளை நடத்தினர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பலரும் பதறியடித்து பள்ளிகளுக்கு ஓடி வந்தனர்.
இதுபோன்ற மிரட்டல் விடுக்கும் நபர்களை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோபமாக தெரிவித்தனர்.
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
{{comments.comment}}