கடைசி வரை போராடி தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்.. சஞ்சு சாம்சன், ருத்துராஜ் மட்டும் ஆடியிருந்தால்!

Apr 05, 2026,07:45 PM IST

பெங்களூரு:  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியைத் தழுவியது.


மிகப் பயங்கரமான பேட்டிங்கை இன்று பெங்களூரு அணி காட்டி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸின் பந்து வீச்சாளர்களை கடுமையாக பனிஷ் செய்து விட்டது பெங்களூரு அணி. குறிப்பாக கடைசி ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்து பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தைக் குளிர வைத்து விட்டது.


முன்னதாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது.


டிம் டேவிட் பேயாட்டம் ஆடி விட்டார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய இவர், ஜேமி ஓவர்டன் வீசிய ஓவரில் மட்டும் 30 ரன்களை விளாசினார். வெறும் 25 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.




பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரஜத் பட்டிதர் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 48 ரன்கள் (6 சிக்ஸர்கள்) சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.


முன்னதாக தொடக்க வீரராக களமிறங்கிய கோலி 28 ரன்கள் எடுத்திருந்தபோது அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 46 ரன்கள் சேர்த்தார்.


சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆர்சிபியின் அதிரடியை கட்டுப்படுத்த திணறினர். அன்ஷுல் கம்போஜ், ஷிவம் துபே மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட ஆரம்பித்தது. ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆட முயன்றதால் ருத்துராஜ், சஞ்சு சாம்சன் என முக்கிய விக்கெட்களை இழக்க நேரிட்டது. ஆனால் பின்னர் வந்த சர்பிராஸ், பிரஷாந்த் போன்றோர் அதிரடி காட்டி ரன்களைக் குவித்தனர்.


ருத்துராஜ், சஞ்சு சாம்சன் ஆகியோர் சற்று நிலைத்து ஆடி ரன் குவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கடைசி ஓவர் வரை போராடிய சென்னையால் 207 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்து. 3வது போட்டியை இந்த சீசனில் தொடர்ச்சியாக இழந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்