சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் வேட்டி சட்டையில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ரசிகர்கள் இன்னும் சிஎஸ்கே மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அடுத்து வரும் போட்டிகளை சென்னை அணி வென்றால்தான் பிளே ஆப் குறித்து கனவு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போக்கு பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. முதல் போட்டியில் ஜெயித்ததோடு சரி, அதற்கு அடுத்து நடந்த 5 போட்டிகளிலும் சென்னை அணி பரிதாபமாக தோல்வியுற்றது. பவர் பிளேவில் அதிரடியாக ஆடாமல் சொதப்புவதுதான் மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுதுவிர வீர்ரகளிடையே ஒரு வேகம் காணப்படவில்லை. ஏதோ வந்தோம் ஆடினோம் போனோம் என்று இருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இப்படி ஆரவாமாக நமக்கு சப்போர்ட் செய்கிறார்களே, ஆவலோடு காத்திருக்கிறார்களோ, வருத்தப்படுகிறார்களோ, ஏங்குகிறார்களே என்று பார்க்காமல் அவர்கள் போக்கில்தான் போய்க் கொண்டுள்ளனர்.

சரி, இன்று புத்தாண்டு, நல்ல நாள். ரொம்ப விமர்சிக்க வேண்டாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி, அஸ்வின், விஜய் சங்கர் உள்ளிட்டோர் வேட்டி சட்டையில் இருப்பது போன்ற தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் கார்டு பலரையும் கவர்ந்துள்ளது. அதேசமயம், வரும் போட்டிகளிலும் இதே மிடுக்கோடு சென்னை அணி வெல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் கடைசி இடத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 2 புள்ளிகள் மட்டுமே வைத்துள்ளது. நெகட்டிவ் ரன் ரேட்டில் வேறு உள்ளது. சென்னை அணிக்கு இன்னும் 8 போட்டிகள் மட்டுமே உள்ளன. அந்த அணிக்கு 16 புள்ளிகள் தேவை. அப்படி கிடைத்தால்தான் பிளே ஆப் பிரிவுக்குப் போக முடியும். அப்போதும் கூட நல்ல ரன் ரேட் இருக்க வேண்டியது அவசியமாகும்.
கடந்த சீசனில் இப்படித்தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோசமான ஆரம்பத்தை வைத்திருந்தது. முதல் 8 போட்டிகளில் 7ல் தோற்றிருந்தனர். ஆனால் பின்னர் அதிரடியாக ஆடி 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் பிரிவையும் அடைந்து அதிசயிக்க வைத்தனர் என்பது நினைவிருக்கலாம். எனவே சென்னை அணிக்கு வாய்ப்புள்ளது. ஆனால் அதிரடியாக விளையாட வேண்டும். இதுவரை விளையாடியது போல விளையாடக் கூடாது. முற்றிலும் உத்வேகம் கொண்ட ஆட்டத்துக்கு மாற வேண்டும். வேறு வழியில்லை.
சென்னை அணியால் நிச்சயம் அதிரடிக்கு மாற முடியும். அத்தகைய வீரர்கள் அணியில் உள்ளனர். ரசிகர்களும் அதே நம்பிக்கை + எதிர்பார்ப்பில்தான் உள்ளனர். பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
{{comments.comment}}