சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷ் இன்று நாடு திரும்பியுள்ளார். அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. விசேஷமாக வடிவமைக்கப்பட்ட காரில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் குகேசுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024ம் ஆண்டிற்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.18 வயதான டி குகேஷ் சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் டிங் லின்னை வீழ்த்தி, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்து வந்த நிலையில், அவரது சாதனையை டி குகேஷ் தற்போது தனது 18 வயதில் முறியடித்துள்ளார்.

இளம் வயதில் சாதனை நிகழ்த்தி, ஓட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் டி குகேஷ்.உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி குகேஷூக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எலான் மஸ்க் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டி குகேஷூக்கு ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷூக்கு ரூ.11.45 கோடி வழங்குகிறது என்று சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று நாடு திரும்பி உள்ள உலக செஸ் சாம்பியன் குகேஷ்சுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணைய செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அரசு சார்பில் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் காரில் செஸ் சாம்பியன் குகேஷ் படத்துடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டள்ளன. மேலும், The new king in … the kingdom of chess என்ற வாசங்களும் இடம் பெற்றுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களின் படங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலை வாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் குகேஷ்சுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் இந்தியாவுக்காக முதலில் உலக சாம்பியன் பட்டம் வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பல செஸ் நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
முதல்வரும், துணை முதல்வரும் உதவினர் - குகேஷ் மகிழ்ச்சி
வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைந்ததும் செய்தியாளர்களை சாம்பியன் குகேஷ் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது கனவு. இளம் வயதில் சாம்பியன் ஆனதில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. அந்த போட்டி முழுவதும் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தன. 14 சுற்றுகள் கொண்டே போட்டியில் சில பின்னடைவுகள் இருக்கும் என்பதும் தெரியும். அதை நான் எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தேன்.இருப்பினும் பயம் இல்லாமலும் இல்லை. வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.சிறு வயதிலிருந்தெ செஸ் விளையாட்டை மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் அணுகுகிறேன். செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும்.
இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் எல்லா சூழலிலும் தேவையான நிதியுதவி வழங்கி ஊக்குவித்தனர். சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரை அரசு நடத்தியது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதுபோல தொடர் ஆதரவு கிடைத்தால் பல இளம் செஸ் வீரர்கள் வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
{{comments.comment}}