சென்னை: தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் மின்சார சொகுசு கார்களின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மிகப்பெரிய எஸ்யூவி உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அதன் புது எலக்ட்ரிக் மாடல் கார்களின் சோதனை ஓட்டத்தை இன்று துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஇ 6 மற்றும் எக்ஸ்யூவி 9இ எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலை மற்றும் சில விபரங்களை அறிமுகம் செய்தது.

அதன்படி பிப்ரவரி 14ம் தேதி இந்த இரண்டு மாடல்களின் புக்கிங் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. மஹிந்திரா பிஇ 6 மாடல் காரை ரூ.18.9 லட்ச தொடக்க விலையாக நிர்ணயம் செய்துள்ளது. அதே நேரம் அதன் டாப் மாடல் காரின் விலையை ரூ.26.90 லட்சம் விலையில் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த மாடல் காரான எக்ஸ்யூவி 9இ காரை ரூ.30.50 லட்சத்தில் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த கார்களின் புக்கிங் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த கார்களுக்கான டெஸ்ட் டிரைவை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் நாளை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே மற்றும் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் மட்டும் தொடங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}