தூத்துக்குடி: கல்வியிலும்,வேலைக்குச் செல்வதிலும் தமிழ்நாட்டுப் பெண்கள் டாப்பாக இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தூத்துக்குடியில் உள்ள காமராஜர் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்க பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டுப் பெண்கள் இந்தியாவிலேயே முதன்மையான இடத்தில் இருக்கிறார்கள். உயர்கல்வியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் முதன்மையான இடத்தில் இருக்கின்றனர். கல்வியை பொறுத்தவரை பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிப்பதில் தடை கற்கள் இருந்தன. பெண்களை படிக்க வைத்தால் பண்பாட்டை இழந்து விடுவார்கள் என்று மூடநம்பிக்கை இருந்தது.தற்போது கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான படிப்புக்கு மட்டுமல்ல வேறு எந்த தடை வந்தாலும் அதை உடைப்பேன். தமிழ்நாட்டு பெண்கள் டாப்பில் இருப்பது தான் பெரியார் காண நினைத்த காட்சி. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்களும் நன்றாக படித்து, நல்ல வேலையில் சேர்ந்து யாரையும் எதிர் பார்க்காமல் சொந்த பொருளாதார பலத்தோடு இருக்கனும் என்று கருதியவர் தந்தை பெரியார்.அது அவரது கனவு.
இத்தனை மாணவிகளை காணும்போது திராவிட வழிதோன்றலில் இருந்து வந்தவர் என்பதில் பெருமிதமாக உள்ளது.
கல்வி கண்களை திறந்துவிட்ட ஆட்சிதான் நீதிக் கட்சி ஆட்சி. கல்வி புரட்சிக்கு அடித்தளமிட்டது நீதிக்கட்சி ஆட்சியில் தான். திராவிடம் என்ன செய்தது என சிலர் அறியாமையில் பேசி வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் கட்டாயக்கல்வியை நீதிக்கட்சி ஆட்சி கொண்டு வந்துள்ளது. பட்டியலின மாணவர்களை அனைத்து பள்ளிகளிலும் சேர்க்க நீதிக் கட்சி உத்தரவிட்டது. மகளிருக்கு என பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு கொண்டு வந்துள்ளது.
சமூக ரீதியாக, பாலின ரீதியாக படிப்பிற்கு தடை கற்கள் இருந்தன. 1911ம் ஆண்டு எழுத்தறிவு பெறாதவர்களின் எண்ணிக்கை மட்டும் 94 விழுக்காடாக இருந்தது. 1921ல் எழுத்தறிவு பெறாதவர்கள் 92 விழுக்காடு. இந்திய பெண்களில் 100 பேர்களில் 2 பேருக்கு மட்டும் தான் அன்றைய காலத்தில் கல்வியறிவு இருந்தது.பள்ளிகளும், கல்லூரிகளும் இந்த அளவிற்கு அன்றைய காலத்தில் இல்லை. படிச்சா அறிவு வரும் தன்னம்பிக்கை வரும் என்று புரிய வச்ச ஆட்சி தான் நீதிக்கட்சி ஆட்சி என்று பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}