மகாத்மா காந்தி 156வது பிறந்தநாள்.. நாடு முழுவதும் அஞ்சலி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Oct 02, 2024,01:30 PM IST

சென்னை:   தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேர்ந்து மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.


நாடு முழுவதும் மகாத்மா காந்திக்கு அரசியல் தலைவர்களும், மக்களும் அஞ்சலி செய்து மரியாதை செலுத்தினர்.


மகாத்மா காந்தி 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தவர். இன்று மகாத்மா காந்தியடிகளின் 156வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 




டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து முதல்வர் காந்தி சிலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, திமுக எம்பிக்கள் என பலர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சிக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கதர் ஆடைகளை அணிந்து மகிழ்வோம். நெசவாளர்களை ஆதரித்து மகிழ்வோம். தேச நலன் காக்கும் கதர், கிராமப்பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு  பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்க வேண்டும். கதர் பருத்தி, கதர் பாலிஸ்டர், கதர்பட்டு ரகங்கள் மக்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. மேலும் கதர் பொருட்களின் விற்பனைக்கு தமிழக அரசு என்றும் துணை நின்று அனைத்து உதவிளையும் செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்