அம்பேத்கருக்கு சமமாக.. இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Dec 06, 2024,06:42 PM IST

சென்னை: அம்பேத்கருக்கு சமமாக யாரையும் இந்தியாவில் சொல்ல முடியாது என சொன்னவர் தந்தை பெரியார். சென்னை  சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவு நீரகற்றும் வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.




அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தந்தை பெரியார் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை பற்றி என்ன சொன்னார் என்று கேட்டால் டாக்டர் அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது என்று சொன்னார். நம்மோட கருத்துக்கள் அனைத்தையும் அவர் பேசியிருக்கிறார்.எனக்கு தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கார் என்று போற்றியவர் நம்முடைய தந்தை பெரியார் அவர்கள்.


அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக எனது ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் தான் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டது. திருமாவளவன் கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது. பட்டியலினத்தைச் சேர்ந்த 2136 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டடுள்ளது. 


பட்டியலின மக்களுக்காக தனியாக தொடங்கப்பட்ட திட்டம் தான் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம். ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். திமுக அரசு பழங்குடியினருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ரூ.1000 கோடி மதிப்பீட்டில் அயோத்திதாசர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டியல், பழங்குடியின மக்களுக்காக திமுக அரசு செயல்படுத்தியது போன்று திட்டங்கள் வேறு எந்த ஆட்சியிலும் செயல்படுத்தவில்லை.


மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதில் திமுக அரசுக்கு வரும் நல்ல பெருக்கு தூய்மை பணியாளர்கள் தான் முக்கிய காரணம். மின்வாரிய ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் நேரம் பார்க்காமல் பணியாற்றுவதன் மூலமே மழை வெள்ளத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது. தூய்மை பணியாளர்கள் என்று சொல்வதை விட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்று கூறலாம். மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே திமுக அரசின் இலக்கு. 


கழிவுநீர் அகற்றும் பணிகளை இயந்திரமயமாக்கி உள்ளோம். எந்த மாநிலமும் நிறைவேற்றாத புதுமை திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. ஏதாவது ஒரு இடத்தில் பட்டியல் இனத்தவருக்கு நடந்த சம்பவத்தை மாநிலம் முழுவதும் நடப்பது போல் பெரிது படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் மதவெறியை பரப்புவோரின் திட்டங்கள் ஒருபோதும் எடுபடாது, மதவெறி, சாதி வெறி கொண்டவர்களின் எண்ணம், இந்த பெரியார், அம்பேத்கரின் மண்ணில் இந்த ஸ்டாலின் இருக்கும் வரை ஒரு போதும் நிறைவேறாது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்