மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதியாக மாறப்போகிறீர்கள்: முதல்வர் முக ஸ்டாலின்

Dec 03, 2025,02:39 PM IST

சென்னை: மாற்றுத்திறனாளிகள் வெறும் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதியாக மாறப்போகிறீர்கள். மாற்றுத்திறனாளிகள் மனுக்களை மட்டும் அளிக்காமல் இனி மனுக்களை பெறப்போகிறீர்கள் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இதுவரை 60க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு இல்லங்களில் தங்கி படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்பட உள்ளது.  அரசு இல்லங்களில் தங்கி படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் அரசியல், சமூக உரிமைகளை நிலைநாட்ட முக்கிய சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.


மாற்றுத்திறனாளிகள் கலைஞரை நோல் மாடலாக எடுத்து செயல்பட வேண்டும். ஒரு விபத்தில் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அந்த வலியையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை சமூகத்திற்காக உழைத்தார். கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு அவரது மனதை பாதிக்கவில்லை. முதுமை காலத்தில் சக்கர நாற்காலியில் தான் வலம் வந்தார். அதில் இருந்தபடி எப்படி பம்பரமாய் சுற்றச் சுற்றி உழைத்தார் என உங்களுக்குத் தெரியும்.




சமூகத்தில் மக்களாட்சிக்கான உண்மையான குரலை உருவாக்கி கொண்டிருக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் வெறும் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதியாக மாறப்போகிறீர்கள். மாற்றுத்திறனாளிகள் மனுக்களை மட்டும் அளிக்காமல் இனி மனுக்களை பெறப்போகிறீர்கள்.ஒவ்வொரு ஊரிலும் இருக்க கூடிய மாற்றுத்திறனாளிகளின் குரலை நீங்கள் எதிரொலிக்க வேண்டும்.


மாற்றுத்திறனாளிகள் எந்த நிலையிலும் சோர்வடைந்து விடக்கூடாது. பிற்போக்குவாதிகளின் குரலை காதில் வாங்கி கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். கருணாநிதிக்கு ஒரு விபத்தில் ஒரு கண் பார்வை பறிபோனது. ஆனாலும் விடாமல் உழைத்தார். சக்கர நாற்காலியில் இருந்தபோது கூட சுற்றிச்சுழன்று உழைத்தார். அந்த வில் பவர் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் நீலகிரியில் வேட்டை .. 4 மாதமாக ஆட்டம் காட்டி வந்த புலி சிக்கியது!

news

மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதியாக மாறப்போகிறீர்கள்: முதல்வர் முக ஸ்டாலின்

news

Sir/Mam.. joke.. kadi joke.. சங்கடப்படாம சிரிச்சுட்டுப் போங்க.. மழை டென்ஷன் குறையும்!

news

தனுஷ்கோடி மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆமைகள்.. என்ன செய்தார்கள் தெரியுமா

news

ஊத்தங்கரையில் குவிந்து கிடக்கும் பிரச்சினைகள்.. நாடாளுமன்றத்தில் கிளப்ப மக்கள் கோரிக்கை

news

மழை நீர் வடிகால் வசதிகள் முழுமையாகததே மக்களின் துயரத்திற்கு காரணம்: தவெக தலைவர் விஜய்!

news

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று சவரன் ரூ.96,480 விற்பனை!

news

3 இடங்களில் குங்குமம் வைக்க வேண்டும்.. பெண்களே இதைத் தெரிஞ்சுக்கோங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்