சென்னை: டிட்வா புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 85,521.76 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 40 கி.மீ.தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது நேராக வடக்கு திசை நோக்கி செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இதற்கு மாறாக புயல் சின்னமானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியச் 134 மி.மீ மழை பதிவாகியுள்ளது. எண்ணூரில் 260 மி.மீ பாரிமுனையில் 250 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதுவரைக்கும் டிட்வா புயலால் 4 பேர் பலியாகியுள்ளனர். 582 கால்நடைகள் பலியாகியுள்ளது.
இந்த கன மழையால் தமிழகம் முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும். இதுவரைக்கும் 85,521.76 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
சரியா தூக்கம் வர மாட்டேங்குதா.. பூண்டு யூஸ் பண்ணிப் பாருங்களேன்.. மாற்றம் தெரியும்
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
தினத்தந்தி நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்.சுகுமாருக்கு.. கலைஞர் எழுதுகோல் விருது
பெங்களூருவில் தமிழ் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?.. சூப்பர் சான்ஸ் வந்திருக்கு பாஸ்!
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. என்ன காரணம் தெரியுமா?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!
{{comments.comment}}