சென்னை: அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் 19 நாட்கள் தங்கி பணிகளை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தும் பேசத் தொடங்கியுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ரூ. 900 கோடி முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவின் அப்லைடு செட்டீரியல்ஸ் நிறுவனம் சென்னை தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கிறது. அதே போல கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலையை ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமைகிறது இந்த ஆலை.
இது தவிர மதுரை வடபழஞ்சி எல்காட் தொழிற்பேட்டையில் இன்பின்க்ஸ் நிறுவனத்தின் மையம் ரூ.50 கோடியில் அமைகிறது.
ஒட்டுமொத்த முதலீகள் மூலமாக மதுரை, சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் உள்ள 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!
கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக
ஸ்வஸ்திக் சின்னம்.. அதிர்ஷ்டம், மங்கலம் மற்றும் செழிப்பின் அடையாளம்!
AI-யிலும் வடிவேலுதான் கிங்கு.. எங்க பார்த்தாலும் அந்தக் குண்டுப் பையன்தான் உருண்டுட்டிருக்கான்!
{{comments.comment}}