I.N.D.I.A vs NDA... அதிகரிக்கும் "முதல்வர்கள்".. எந்தக் கூட்டணியில் தெரியுமா?

Aug 31, 2023,11:54 AM IST
சென்னை: இந்தியா கூட்டணியிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் எத்தனை மாநில முதல்வர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போட்டியாக இந்தியா கூட்டணியிலும் முதல்வர்கள் கிட்டத்தட்ட சரிக்குச் சமமாக உள்ளனர் என்பது சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

காங்கிரஸ், திமுக, திரினமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது.



இந்தக் கூட்டணியின் முதல்  கூட்டம் பாட்னாவில் நடந்தது. 2வது கூட்டம் பெங்களூரில் நடந்தது. தற்போது 3வது கூட்டம் மும்பையில் நடக்கப் போகிறது. 

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சமமான அளவில் இந்தியா கூட்டணியிலும் கட்சிகள் அதிகரித்து வருகின்றன. கூடவே முதல்வர்களும் அதிகரித்து வருகின்றனர். இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள முதல்வர்கள் படங்களைப் போட்டு காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ட்வீட் செய்துள்ளது. அதில் 11 முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர்.  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் பினராயி விஜயன், சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரே அவர்கள்.

இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் 4 பேர் ஆவர். ஆம் ஆத்மி முதல்வர்கள் 2 பேர். மற்றவர்கள் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மறுபக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பார்த்தால் அங்கு 15 முதல்வர்கள் உள்ளனர். அதாவது இந்தியா கூட்டணியை விட 4 முதல்வர்கள் அதிகம். முதல்வர்கள் பலத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இந்தியா கூட்டணி வந்து விட்டது.

இன்னும் தெலங்கானா, ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் இந்தியா கூட்டணி பக்கம் ஆர்வம் காட்டவில்லை. ஒருவேளை இவர்களும் வந்தால் நிச்சயம்  இந்தியா கூட்டணியில் முதல்வர்கள் பலம் அதிகரிக்கும்.  வேறு சில முதல்வர்களும் இணைந்தால் இன்னும் பலம் அதிகமாகும். இதற்குத்தான் இந்தியா கூட்டணி தொடர்ந்து முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்