ஒரு சாதாரண பேச்சுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

Mar 24, 2023,11:35 AM IST
சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய சாதாரண பேச்சுக்கு இவ்வளவு பெரிய சிறைத் தண்டனை கொடுப்பது என்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது மட்டுமல்ல, வரலாறு காணாததும் கூட என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சூரத் மாவட்ட கோர்ட், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. தீர்ப்பு குறித்து இரு விதமான கருத்துக்கள் வருகின்றன. பாஜக தரப்பு மற்றும் பாஜக ஆதரவாளர்கள் இந்தத் தண்டனையை வரவேற்றுள்ளனர். 



அதேசமயம், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த தண்டனை மிக மிக அதிகமானது, தேவைற்றது என்று கருத்து கூறி வருகின்றன. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறுகையில், இது ஏற்றுக் கொள்ள முடியாதது. வரலாறு காணாதது. ஒரு சாதாரண பேச்சுக்காக இவ்வளவு பெரிய தண்டனை என்பது நியாயமற்றது. யாரையும் குற்றம் சாட்டும் மன நிலையில் ராகுல் காந்தி பேசவில்லை. வேண்டும் என்றே அவர் பேசவில்லை.

எதிர்க்கட்சிகளை தொடர்ந்து குறி வைத்து வேட்டையாடுகிறது பாஜக. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பார்க்கிறது பாஜக. அதன் அட்டகாசங்கள் விரைவில் முடிவுக்கு வரும். நான் அன்பு சகோதரர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி எனது ஆதரவைத் தெரிவித்தேன். நிச்சயம் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

அகில இந்திய அளவில் ராகுல்காந்திக்கு மிகத் தீவிரமான ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து கொடுத்து வருவது திமுக மட்டுமே. ராகுல் காந்தியே அடுத்த பிரதமர் என்றும் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்