சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள தமிழக ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இந்த விவகாரத்தில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பூவை ஜெகன் மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கடத்தப்பட்ட சிறுவன் ஏடிஜிபி ஜெயராமனின் காரில் திரும்பக் கொண்டு வந்து விடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். எனவே இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபிக்கும் உள்ள தொடர்பு குறித்து பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து 7 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக நேற்று பிற்பகல் ஆஜராகும்படி பூவை ஜெகன் மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமனுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். இதை அடுத்து இந்த வழக்கில் ஏன் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்க நீதிபதி வேல்முருகன் ஆணையிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜெயராமை சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து, குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீதான பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலையில் அதிரடி... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
தேசிய விருது பெற்ற.. பார்க்கிங் குழு.. தோழி ஊர்வசி.. தம்பி ஜி.வி.பிரகாஷுக்கு ..கமல்ஹாசன் வாழ்த்து!
ஆடிப்பெருக்கு.. நீரின்றி அமையாது உலகு.. தண்ணீர்த் தாயை போற்றி வணங்கி வழிபடுவோம்!
மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்.. மாரடைப்பு.. சோட்டானிக்கரை ஹோட்டலில் பரபரப்பு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 02, 2025... இன்று மகிழ்ச்சியை அனுபவிக்க போகும் ராசிகள்
71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!
10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!
சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!
எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?
{{comments.comment}}