பெங்களூரு : சீனாவில் கடந்த சில வாரங்களாக பரவி உலக நாடுகளை பரபரப்படைய வைத்த HMPV வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது. முதல் HMPV வைரஸ் பாதிப்பு இந்தியாவில், அதுவும் பெங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக HMPV வைரஸ் என்ற ஒரு வகையான வைரஸ் வேகமாக பரவி வந்தது. இன்ஃபுளுயன்சா, நிமோனியா ஆகிய காய்ச்சல்களின் அறிகுறிகளான சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல் ஆகிய அறிகுறிகள் தான் இதற்கும் உள்ளது. இந்த வைரஸ் குழந்தைகள், பெரியவர்களையே அதிகம் பாதிக்கும் என்பதால் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக பலரும் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் உருவாகி உள்ளதாக உலகம் முழுவதும் பதற்றமான நிலை காணப்பட்டது.

ஆனால் HMPV வைரஸ் என்பது புதிய வகை வைரஸ் கிடையாது, 2021 ம் ஆண்டு முதலே உள்ளது தான் என சீன சுகாதார துறையும், உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய சுகாதாரத்துறையும் தொடர்ந்து அப்டேட் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் HMPV வைரஸ் பரவ துவங்கி உள்ளது உறுதியாகி உள்ளது.
பெங்களூருவில் 8 மாத குழந்தை ஒன்றிற்கு HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. அந்த குழந்தையின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது சாதாரணமாக குளிர்காலங்களில் பரவக் கூடிய ஃபுளு தான் என சொல்லப்படுகிறது. சீனாவில் பரவி வரும் இந்த வைரசை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாகவும். சீனாவில் பரவி வரும் வைரஸ் என்பது வழக்கத்திற்கு மாறானது கிடையாது என இந்திய சுகாதார மையமும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}