பெய்ஜிங்: சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் அந்தக் கப்பலில் இருந்த 55 கடற்படை வீரர்களும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மற்றும் இங்கிலாந்து கப்பல்களைக் கண்காணிப்பதற்காக அனுப்பபப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் இது. எதிர்பாராத விதமான விபத்தால் இந்த கப்பல் அப்படியே கடலில் மூழ்கி விட்டது. இதனால் கப்பலில் இருந்த 55 கடற்படையினரும் உயிரோடு கடலில் மூழ்கி விட்டனர். யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தானது மஞ்சள் கடலில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்து குறித்த தகவலை சீனா மறுத்துள்ளது. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று அது கூறியுள்ளது. அதேபோல தைவானும் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது போல தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் டைம்ஸ் பத்திரிகை இதுதொடர்பான விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை அது வெளியிட்டுள்ளது.
093-417 என்ற எண் கொண்ட அந்த சீன நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் மூழ்கி விட்டதாகவும், அதில் 55 வீரர்கள் இருந்ததாகவும் டைம்ஸ் செய்தி கூறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி இந்த விபத்து நடந்ததாகவும் அது மேலும் கூறியுள்ளது.
வடக்கு ஷாங்காய் அருகே சன்டாங் மாகாணத்தையொட்டி கப்பல் நிலை கொண்டிருந்தபோது ஆக்சிஜன் தீர்ந்து போனதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கப்பலுக்குள் இருந்த அனைவருமே மூச்சுத் திணறி இறந்து போயுள்ளனர். கடலுக்கு அடியில் இங்கிலாந்து, அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்தால் அதை பிடிப்பதற்காக பல்வேறு தடுப்புகளை போட்டு வைத்துள்ளது சீன கடற்படை. அப்படிப்பட்ட ஒரு தடுப்பில் போய் சீனாவின் இந்த நீர்மூழ்கிக் கப்பல் சிக்கிக் கொண்டதால்தான் விபத்து நேரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அமெரிக்காவுக்கு சீனா வைத்த ஆப்பில் அதுவே சிக்கிக் கொண்டு விட்டது.
சீனாவிடம் அணு சக்தியால் இயங்கக் கூடிய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் 6 உள்ளன. கடந்த 15 வருடமாக இவை செயல்பாட்டில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}