வைரமுத்து வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வதா.. சின்மயி அதிருப்தி

Jul 13, 2023,02:15 PM IST
சென்னை: பல்வேறு பெண்களால் பாலியல் முறைகேடு புகாருக்குள்ளான கவிஞர் வைரமுத்து வீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றது குறித்து பாடகி சின்மயி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுகுறித்து பாடகி சின்மயி ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.



வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகாரைச் சுமத்தியவர் சின்மயி. அவரது டிவிட்டர் தளத்திலும் தொடர்ந்து வைரமுத்து மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்து வந்தார். இந்த நிலையில் வைரமுத்து வீட்டுக்கு முதல்வர் போயிருப்பது குறித்து சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:

பல பெண்களால் பாலியல் முறைகேடு புகாருக்குள்ளான ஒருவரின் வீட்டுக்கு முதல்வர் போயுள்ளார், பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  பல விருதுகளை வாங்கியுள்ள பின்னணிப் பாடகியான எனக்கு தமிழ்த் திரையுலகம் 2018ம் ஆண்டு முதல் பணியாற்றத் தடை விதித்துள்ளது. கவிஞரை பலாத்காரவாதியாக நான் கூறியதற்காக இந்தத் தண்டனை.

5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த நாட்டில் நீதி கிடைப்பது அவ்வளவு சிரமமாக இருக்கிறது.  நீ எப்படி நீதி கேட்கலாம் என்றுதான் பலரும் கேட்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு பிறந்த ஒரு பலாத்காரவாதி, ஒரு பெண் மீது தனது கையை அத்துமீறி வைக்கலாம், சேட்டைகள் செய்யலாம், வாயை மூடிக் கொண்டிரு என்று மிரட்டலாம்.. திமுக தலைவர்கள் பலரும் தனக்கு நெருக்கமானவர்கள் என்பதைப் பயன்படுத்தி அதையெல்லாம் இவர்செய்யலாம். அவருக்கு பல பத்ம விருதுகளும் கிடைக்கும், சாஹித்ய நாடக அகாடமி விருதும் கிடைக்கும், பல தேசிய விருதுகளும் கூட கிடைக்கும்.

இந்த மனிதரின் செல்வாக்கு இது. இதனால்தான் நானும் பிற பெண்களும் ஆரம்பத்திலேயே இவரை எக்ஸ்போஸ் செய்யத் தயங்கியதற்குக் காரணம். பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் அத்தனை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் வெட்கப்பட வேண்டும். வைரமுத்து விவகாரம் எழுப்பப்படும்போதெல்லாம் அவர்கள் கல்லாக மாறி விடுகிறார்கள்.

இந்த மாநிலம் மோசமான கலாச்சாரத்தை கொண்டுள்ளது. பாலியல் புகாருக்குள்ளானவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.  அனுதாபம், கல்வி, விவிப்புணர்வு, உணர்வு எல்லாமே இங்கு ஜீரோதான்.

பிரிஜ்பூஷன் முதல் வைரமுத்து வரை அனைவருமே எளிதாக தப்பி விடுகிறார்கள். காரணம் அரசியல்வாதிகள் அவர்களைக் காப்பாற்றி விடுகிறார்கள் என்று குமுறியுள்ளார் சின்மயி.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்