அழகர் ஆற்றில் இறங்குதல், திருவண்ணாமலை கிரிவலம்.. சித்ரா பௌர்ணமி 2026 சிறப்புகள்!

Apr 29, 2026,02:51 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 மே மாதம் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சித்திரை 18 ஆம் நாள் சித்ரா பௌர்ணமி. தமிழ் மாதம்  சித்திரையில் வரும் பௌர்ணமி நாளான சித்ரா பௌர்ணமி தமிழர்களின் வாழ்வில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்களில் ஒன்று ஆகும்.


சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலம் பற்றிய தகவல்களை  இப்பதிவில் காணலாம். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் நுழையும் நாளையே நாம் சித்ரா பௌர்ணமி ஆக கொண்டாடுகிறோம். 


இந்த நன்னாளில் எமதர்மராஜாவின் உதவியாளரும், மனிதர்களின் நற் செயல்கள் மற்றும் தீய செயல்களை பதிவு செய்பவருமான சித்திரகுப்தரின் பிறந்த நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கர்மங்களை கணக்கிடும் நாளாகவும், ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி,பண்பாட்டு ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.




நேரம்: ஏப்ரல் 30,  வியாழக்கிழமை  இரவு 0 9.51 மணிக்கு பௌர்ணமி ஆரம்பம்.

மே 01,  வெள்ளிக்கிழமை இரவு 11:0 7 மணிக்கு பௌர்ணமி முடிவு.

 

சித்திரை நட்சத்திரம் துவங்கும் நேரம் ஏப்ரல் 30 அதிகாலை 01.11 மணி. சித்திரை நட்சத்திரம் முடியும் நேரம் மே 1 அதிகாலை 2:41 மணி.


திருவண்ணாமலை கிரிவலம்:


சித்ரா பௌர்ணமி கிரிவலம் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 09 :52 மணிக்கு தொடங்கி மே 1 வெள்ளிக்கிழமை இரவு 

11:0 8 மணி வரை செய்ய உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமான  திருவண்ணாமலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் பக்தர்கள் இம்மலையை வலம்  வருதலை கடைபிடிக்கின்றனர். திருவண்ணாமலையை வலம் வருதல் 'கிரிவலம்' என்று அழைக்கப்படுகிறது.


மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்கள்,வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்து வழிபாடு செய்கின்றனர்.


பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்வது வழக்கம். 


கிரிவலப் பாதையில் அமைந்துள்ள லிங்கங்கள் :


பக்தர்கள் கிரிவல பாதையில்  வலம்  வரும்பொழுது இந்திரலிங்கம்,அக்னி லிங்கம்,எமிலிங்கம்,  நிருதி  லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், வருணலிங்கம் மற்றும் ஈசானிய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமண மகரிஷி, சேஷாத்திரி மகரிஷி சுவாமிகள், விசிறி சாமியார் ஆகியோரின் சமாதிகளும் அமைந்துள்ளது. இந்த ஆண்டு கோடை வெயில் மிகவும் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் கிரிவலம் செல்வது சிறப்பு.


சித்ரா பௌர்ணமி வழிபாடுகள்:


புனித நீராடல்:


இந்த நன்னாளில் மக்கள் தங்களுடைய உடலையும், மனதையும் தூய்மைப்படுத்திக் கொள்ளவும்,தெய்வீக அருளை பெறவும் புனித நீராடல் மிகவும் அவசியமானது ஆகும்.


விரதம்:


சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டு, மாலை நேரத்தில் சந்திரனையும் வழிபட்டு தங்களின் விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு.


தான தர்மங்கள் :


தங்களால் இயன்ற அளவு ஏழைகளுக்கு உணவு, உடை, அத்தியாவசிய பொருட்களை தானமாக வழங்குவதால் மக்களின் கர்ம வினைகள் பெருமளவில் குறையும்.


திருவண்ணாமலை கிரிவலம்:


சித்ரா பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செய்து சிவபெருமானை வழிபடுவது பாவங்களை போக்கி,மிகப்பெரிய புண்ணியத்தை பெற்று தரும்.இதனால் சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.


இந்த நாள் சித்ரகுப்தரையும், சிவபெருமானையும் வழிபடுவதால் மனதில் அமைதியும் இறையருளும் கிடைக்கும். இதனால் கர்ம வினைகள் குறையும் என்பது ஐதீகம்.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

news

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

news

GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை

news

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு

news

ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்

news

சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்

news

பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி

news

Beautiful things don't ask for attention

அதிகம் பார்க்கும் செய்திகள்