Merry Christmas.. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் .. பலரும் அறியாத நடைமுறைகள்

Dec 25, 2024,04:50 PM IST

இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் பலரும் அறியாத கிறிஸ்துமஸ் நடைமுறைகள் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 


பலரும் அறியாத கிறிஸ்தமஸ் கொண்டாட்ட சுவாரஸ்யங்கள் :


* பெரும்பாலான கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25ம் தேதி தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். ஆனால் கிழக்கு மரபு வழி திருச்சபைகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜனவரி 07ம் தேதியை தான் கிறிஸ்து அவதரித்த நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.


* டிசம்பர் 25ம் தேதி தான் இயேசு கிறிஸ்து அவதரித்தார் என பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இயேசு கிறிஸ்து எப்போது அவதரித்தார் என்பது யாருக்கும் சரியாக தெரியாது. கி.பி., 4ம் நூற்றாண்டில் போப் ஜூலியஸ் தான் டிசம்பர் 25ம் தேதியை தேர்வு செய்து இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.




* ஆரம்ப காலத்தில் கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகையாக மட்டுமே இருந்து வந்தது. தேவாலய சேவைகளை செய்வதற்கும், அமைதி மற்றும் நற்பண்புகளை அனைவரிடமும் பரப்புவதற்கான நாளாக மட்டுமே இருந்து வந்தது.


* பிறகு காலப் போக்கில் பல்வேறு பிரிவுகள், கலாச்சாரங்கள் உருவானதாலும், பல பாரம்பரிய மக்கள் கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு இதற்கு மாறியதாலும் மெல்ல மெல்ல கிறிஸ்துமஸ் கொண்டாடும் முறைகளில் மாற்றம் ஏற்பட்டது.


* டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, திருப்பலி நற்கருணை விருந்தம் நடைபெறும். 


* இதற்கு பிறகே கிறிஸ்து அவதரித்து விட்டதன் அடையாளமாக கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளில் நாணல் போன்ற புல்லினால் குடி அமைத்து, குழந்தை இயேசுவின் வடிவத்தை வைப்பார்கள்.


* கிறிஸ்துமஸ் அவதரித்த நாளே தங்கள் வாழ்வில் புதிய ஒளி பிறந்ததாக எண்ணி புத்தாண்டை அணிந்து, வான வேடிக்கை, விருந்து என கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள். 


* கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்து சிலர் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, வாழ்த்து தெரிவிப்பார்.  


* கி.பி., 17ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் பற்றி பைபிளில் எங்கும் குறிப்பிடவில்லை என கூறி இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதித்திருந்தனர். அதற்கு பிறகு 12 முதல் 14 வருடங்களுக்கு பிறகு தான் மீண்டும் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் துவங்கப்பட்டன.


* சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்தமஸ் தாத்தா எப்படி இருப்பார் என்றும் யாருக்கும் தெரியாது. தற்போதுள்ள படி சிவப்பு அங்கி, வெள்ளை தாடி உடன் இருக்கும் உருவத்தை கொடுத்து, அவரை ஜாலியான மனிதராக உருவம் கொடுத்து உருவாக்கியது 1930களில் கோக்கோ கோலா நிறுவனம் விளம்பரம் தான்.


* கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து, அவற்றில் மெழுகுவர்த்தி போன்ற பல விதமான அலங்கார பொருட்களால் அலங்கரிக்கும் முறை 16ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் தோன்றிய முறையாகும்.


* இயேசு கிறிஸ்து பிறந்த நாளை நினைவு கூறுமக் விதமாக கிறிஸ்தமஸ் பண்டிகை கொண்டாடுவதாக சொல்லப்பட்டாலும் அது அன்பு, மகிழ்ச்சி, உற்சாகம், மனிதர்களிடம் ஒற்றுமை ஆகியவற்றை ஏற்படுத்தும் பண்டிகை என்பதால் அனைத்து மதத்தினராலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்

news

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்