பெங்களூர்: பெங்களூரு அனில் கும்ப்ளே ரவுண்டானா பகுதியில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
பெங்களூருவில் எம் ஜி சாலை அருகில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கஸ் பகுதியில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் திடீரென தீ பிடித்துக் கொண்டது. தீ மளமளவென எரியத் தொடங்கியதும், டிரைவர் சுதாரித்து உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்த பயணிகளை வெளியே போகுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பேருந்தில் இருந்த 30 பயணிகளும் வேகமாக வெளியேறினர்.
டிரைவரின் சமயோஜிதம், பயணிகளின் வேகம் காரணமாக, நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. ஓட்டுநர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எஞ்சின் அதிகம் சூடேறியதால் பேருந்தில் தீப்பிடித்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதேபோலத்தான் சமீபத்தில் சென்னையிலும் அரசு பஸ் இப்படி தீப்பிடித்துக் கொண்டது என்பது நினைவிருக்கலாம்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}