- மொழிப்பித்தன் இரா.ச.குமார்
நானோ நெருங்குகிறேன்
நீயோ விலகுகிறாய்
சரி
நெருங்குவதை கைவிடுகிறேன்
நீ விலகலை விட்டு தொலை...
--
காற்று கை வீசி நடக்குமளவு
நமக்கிடையே
ஒரு இடைவெளி
எப்போதும் இருக்கட்டுமென
நிபந்தனையற்ற
ஒப்பந்தம் ஒன்றை எழுதலாமா?..
--

நான் நெருங்குவது
நீ விலகுவது தொடர்கதையானால்
முடிவென்பதுதான் எப்போது?..
--
வேலை வெட்டியற்ற முற்றுப்புள்ளி ஒன்று
வெட்டியாய்
என் சொற்களோரம் கிடக்கிறது...
--
அந்த
ஒற்றை முற்றுப்புள்ளி
தன்னை
பயன்படுத்தி சொல்லி
இடையூறாகிறது சொற்களுக்கு மத்தியிலே நின்று...
--
ஒட்டி உரசுமளவு
கூட வேண்டாம்
அது
தேவைப்படுவதுமில்லை
சற்று ஒரு இடைவெளிவிட்டு நெருங்கேன்
உன் மூச்சுக்காற்றின்
வெப்பத்தை
நான் உணருமளவிலான
தூரத்தில்...
--
நான் முடிவுரையெழுதி
முற்றுப்புள்ளியிட்டு
முடிக்க முடிவு செய்கிறேன்
நீயோ தொடருமென
தயங்கி தயங்கி
இடுகிறாய் அரைப்புள்ளி...
--
இந்த புள்ளிகளை தூக்கியெறிவதா
இருந்து தொலைகிறதென
இருப்பில் வைக்கவா?..
--
முற்றும் போடுகிறேன்
எழுதும்
இந்த கவிதைக்கு...
--
முற்றுமென முடிந்தது
இனி
எந்த புள்ளிக்கும் இங்கு இடமிருக்காது
இன்னொரு கவிதை எழுதும் வரை...
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}