சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி மோகனாவுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள மோகனா , நீதித்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். வழக்கறிஞர் துறையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2-ஆவது பெண்மணி என்ற பெருமையையும், அதே வேளையில் இந்தப் பெருமையைப் பெறும் முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இவருடைய இந்த நியமனம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இது குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: "வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2-ஆவது பெண்மணி மற்றும் முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள மோகனா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மாண்புமிகு நீதிபதி மோகனா அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மோகனா அவர்களின் இந்த உயர்வு, சட்டத்துறையில் கால்பதிக்கும் பல இளம் பெண்களுக்கு, குறிப்பாகத் தமிழகப் பெண்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும் வழிகாட்டியாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}