ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

Nov 25, 2024,05:54 PM IST

டில்லி :   பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேலையில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சிற்கு அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முதல்வரை மிக கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்துள்ளார்.


சென்னையில் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வரை சந்தித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளது பற்றி முதல்வரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விளக்கம் அளித்து விட்டார். ராமதாசுக்கு வேறு வேலையில்லை. அதனால் தான் ஏதாவது ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு எல்லாம் பதிலளித்து கொண்டிருக்க வேண்டிய அவசியல்லை" என தெரிவித்திருந்தார்.




பாமக நிறுவனர் பற்றி முதல்வர் கூறிய கருத்து தொடர்பாக டில்லியில் இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, இப்படிப்பட்ட ஆணவ பேச்சு முதல்வரின் பதவிக்கு அழகல்ல. ராமதாஸ் இல்லாவிட்டால் 2006ல் இவர்களால் தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கவே முடியாது. உங்கள் தந்தை முதல்வராகியிருக்க முடியாது. அவரது உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் கூட இடம் கிடைத்திருக்காது.


அப்படிப்பட்ட ராமதாஸை, 86 வயதான மூத்த தலைவரை, அவருக்கு வேலை இல்லை என சொல்வது அவரை அவமதிக்கும் செயலாகும். இது வன்மையாக கண்டிக்கதக்கது. இதற்காக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாது.


முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதட்டம்.. அவர் பதட்டம் அடையும் அளவுக்கு மருத்துவர் ராமதாஸ் எதையும் கேட்டு விடவில்லையே. அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியிருக்கும் விவகாரம் தொடர்பான நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாடு மின்வாரியமும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து முதல்வர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றுதானே மருத்துவர் ராமதாஸ் கேட்டிருந்தார். அது மிகவும் சரியானதே. 


அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் மானம் அமெரிக்காவில் கப்பலேறிக் கொண்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுமானால் அக்கறை இல்லாமல் இருக்கலாம். கவலையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவும், அரசியல் கட்சியின் நிறுவனராகவும் மருத்துவர் ராமதாஸுக்கு அக்கறை உள்ளது. அதனால்தான் இந்த குற்றச்சாட்டுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்