சென்னை: கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 3 பேரை போலீஸார் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}