சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லடசம் நிவாரண உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக ஒரு வார காலத்திற்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மல்லிப்பட்டனம் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. காலையில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த மதன்குமார் என்ற நபர், ஆசிரியர்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்த ஆசிரியை ரமணியை கொடூரமாக கத்தியால் கொன்று விட்டார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் ரமணியின் வீட்டில் அவரை கட்டிக் கொடுக்க மறுத்து விட்டனர். இந்த கோபத்தில் இப்படிப்பட்ட வெறிச் செயலை செய்துள்ளார் மதன்குமார்.
இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு இழப்பீட்டை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியை ஆகப் பணிபுரிந்து வந்த செல்வி ரமணி (வயது 26) இன்று காலை பள்ளி வளாகத்தில் இருந்த போது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பி வைத்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்று தரப்படும்.
கிராமப்புற பகுதியில் கல்விப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக்கல்வித்துறைக்கும் சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். செல்வி ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கு விடுமுறை - கவுன்சிலிங் தர உத்தரவு
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் ஒரு வார காலத்திற்கு விடுமுறை விடப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்த பிறகே பள்ளி திறக்கப்படும்.
பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். அச்ச உணர்வை போக்க கவுன்சிலிங் தரப்படும். இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அன்பில் மகேஸ்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா
C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!
பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?
போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!
பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!
தொடர் உயர்விற்கு பின்னர் குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}