கருணை மிகு தாய், தூண்போன்ற மனைவி, தன்னம்பிக்கை மகள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Sep 15, 2023,03:26 PM IST

சென்னை: கருணை மிகு தாய் , தூண்போன்ற மனைவி, தன்னம்பிக்கை மிக்க மகள் கிடைக்க நான் மிகவும் 

கொடுத்து வைத்தவன் என்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.கஸ்டாலின் கூறினார்.


காஞ்சிபுரத்தில் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது மிகவும் உருக்கமாக பெண்களின் நிலை குறித்து விவரித்தார்.




முதல்வர் ஸ்டாலின் பேச்சிலிருந்து...


ஒர் ஆணின் வெற்றிக்கவும், குழந்தைகளின் கல்விக்காகவும் பெண்கள் எத்தனை மணி நேரம் உழைத்திருப்பார்கள். அதற்கொல்லாம் கணக்கிட்டு ஊதியம் கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது. ஆனால் உங்க மனைவி என்ன பண்றாங்கனு கேட்டா, சொல்லுவாங்க "ஹவுஸ் ஒய்ப்" என்று. அதுலயும் சும்மா தான் இருக்காங்கனு செல்லுவாங்க. பெண்கள்  வீட்டில் சும்மாவா இருப்பாங்க. வீட்டு வேலை பார்க்குறதுக்கு எதுவும் கொடுப்பது கிடையாது. ஆனால் மகளிருக்கு ஆன உழைப்பை அங்கீகரிக்க உருவாக்கப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர்  உரிமை திட்டம்.


தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு கிடைத்தால் அதைவிட செல்வம் 

வேறு தேவையில்லை. உண்மையில் ஒரு ஆணை வழிநடத்துவது தாய்மையும், பெண்மையும் தான். எனனுடைய தாய் தயாளு அம்மாள் கருணையே வடிவானவங்க. சின்ன வயதில் நான் நிகழ்ச்சி நடத்தினால்

மழை வரக்கூடாதுன்னு வேண்டுவாங்க. இன்றைக்கு அவங்க வயது முதிர்வினால் கோபாலபுர வீட்டில் இருக்காங்க. 


நான் போய் பார்த்தால் எங்கம்மா முகத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதே போல தான் என் மனைவி தூர்காவும்.  

என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் இருந்தாலும் எனக்கு உறுதுணையாக இருப்பது எனது மனைவி  தூர்கா தான். அடுத்தது எனது மகள் செந்தாமரை. ஒரு அரசியல்வாதியின் மகள் என்ற சாயல் விழுந்துவிடக்கூடாதுன்னு கவனமாக இருப்பார். கருணை மிகு தாய், தூண்போன்ற மனைவி, தன்னம்பிக்கையான மகள் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன் என்று பெருமையாக பேசினார் ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

news

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

news

GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை

news

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு

news

ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்

news

சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்

news

பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி

news

Beautiful things don't ask for attention

அதிகம் பார்க்கும் செய்திகள்