டசெல்டோர்ப்: உலகத்தின் எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு தமிழன் இருப்பான். கண்டங்கள் கடந்து விட்டாலும் நம் தொப்புள்கொடி உறவு அறுந்துவிடவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி வாழ் தமிழர்களிடையே உரை நிகழ்த்தியுள்ளார்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றுள்ளார். ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது, பல்லாயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சிதான், உண்மையான தமிழ்ப் பாசம்! தமிழினப் பாசம் இது.
உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழன் இருப்பான்; தமிழ்க் குரலைக் கேட்கலாம் என்று சொல்கின்ற அளவுக்கு உலகெல்லாம் பரவி, தங்களுடைய அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கின்ற இனம்தான், நம்முடைய தமிழினம்! நம்முடைய இனத்திற்கான இதுதான் மிகப் பெரிய பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும், இனமும் நம்மை இணைக்கின்றது!கண்டங்களைக் கடந்துவிட்டாலும், நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை. பேரறிஞர் அண்ணாதான் சொல்வார். ஒருதாய் வயிறு தாங்காது என்ற காரணத்தால், தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் நாம் என்று சொல்வார். அப்படி உடன்பிறப்புகளாக, தமிழர்களான நாம் இணைந்திருக்கிறோம்.
ஜெர்மனி நாட்டில் உங்கள் எல்லோரையும், அதுவும் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கின்றபோது மகிழ்ச்சி. நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்புமிக்க பொசிஷனில் இருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவனாக மிகந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய தமிழ்நாட்டு வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எல்லாம் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் - சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்பீர்கள். இங்கு இருக்கக்கூடிய உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கேள்வியும் பட்டிருப்பீர்கள். இந்த வளர்ச்சியை இன்னும் இன்னும் விரைவுப்படுத்த வேண்டும் என்று தான் முதலீட்டாளர்கள் மாநாடு, அதாவது முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
U.A.E, ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கெல்லாம் பயணத்தை மேற்கொண்டு ஏராளமான முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்து, நம்முடைய மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.
தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது திராவிட மாடல் அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!
உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}