சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கப்பட்டு ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வுகள் மாநில முழுவதும் மொத்தம் 4107 மையங்களில் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதில் 8,18, 743 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதாவது, மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும் எனக் கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}