சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவரும், அமரன் படத் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் விடுத்த அழைப்பின் பேரில் அப்படத்தை தனது மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுடன் சென்று பார்த்து ரசித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்த கதையாகும்.
இப்படம் தீபாவளியையொட்டி இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்க்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து தணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் சென்று படத்தை நேற்றுப் பார்த்தார் முதல்வர். இதுகுறித்து அவர் போட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

கமல்ஹாசன் அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார், மேஜர் முகுந்த் வரதராஜன் - இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}