தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம்.. சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Aug 12, 2025,11:31 AM IST
சென்னை: தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்பது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள சமூக நலத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படுகிறது. இது அவர்களின் சிரமத்தைக் குறைக்கும்.

இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தண்டையார்பேட்டையில் தொடங்கி வைத்தார். இதைத் தொர்ந்து கோபால் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களைத் கொடுத்து திட்டத்தை முறைப்படி முதல்வர் தொடங்கி வை்தார்.



இத்திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 21 இலட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயனடைவார்கள்.

முன்னதாக திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்திருந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது: 

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்! அந்த வரிசையில், என்னுடைய மனதிற்கு பிடித்த திட்டமாக உருவாகியிருப்பதுதான், இந்த தாயுமானவர் திட்டம்!
கூட்டுறவுத் துறை சார்பில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இப்படி, அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி!

ஒரு திட்டத்தை அறிவிப்பதோடு, கடமை முடிந்துவிடுவதாக நாம் நினைப்பதில்லை! அந்த திட்டத்தின் பலன் பயன், கடைக்கோடி
மனிதரையும் சென்று சேருகிறதா என்று கண்காணிப்பதையும் கடமையாக நினைக்கிறேன்! அப்படி, வயது முதிர்ந்தோரும் மாற்றுத் திறனாளிகளும் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணர்ந்து, இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்!

இந்தத் திட்டத்தை 34 ஆயிரத்து 809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்த போகிறோம்! 70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என்று 21 இலட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் இந்த திட்டத்தால் பயனடைய போகிறார்கள்! ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குடிமை பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்! இதற்காக கூட்டுறவுத் துறைக்கு ஆகப்போகும் 30 கோடியே 16 இலட்சம் ரூபாயை கூடுதல் செலவாக கருதாமல் - மக்களுக்கு செய்யும் உயிர்காக்கும் கடமையாக நாங்கள் நினைக்கிறோம்! இது கூட்டுறவுத் துறையின் மிகப்பெரிய சேவை! அந்தத் துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப் போகும் மிகப்பெரிய கடமை!

தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்து 328 நியாய விலைக் கடைகள் இருக்கிறது! இதில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 394 புதிய நியாய விலைக் கடைகளை திறந்திருக்கிறோம்! தலைவர் கலைஞர் வழியில், இந்த நியாய விலைக் கடைகளை நாம் முறையாக சிறப்பாக நடத்துவதால்தான், தமிழ்நாடு இன்றைக்கு பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது! இந்த ரேசன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்க முயற்சிகள் எடுத்திருக்கிறோம்!

இந்த நேரத்தில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலவலர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் நூறு விழுக்காடு நிறைவேறும் வகையில் உங்களின் பணி அமைய வேண்டும்! உங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் மனம் குளிரும் வகையில் நீங்கள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்! நீங்கள் பெறும் நல்ல பெயர்தான், ஆட்சிக்கு கிடைக்கும் பாராட்டு என்று அவர் தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்