முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களால்.. வேளாண் துறையில் சாதனை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

May 23, 2024,04:19 PM IST

சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த சீர்மிகு திட்டங்களால் உணவு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கை:




தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு துறைகளில் பல நலத்திட்ட திட்டங்களை வகுத்தார். இந்தத் திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக வேளாண்மை துறைக்காக  தமிழ்நாட்டில் முதல்முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.


இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த வேளாண்மை திட்டத்தில் இதுவரை, விவசாயிகள் பயன்பெறும் வகையில் 270 கோடி செலவில் 2163 டிராக்டர்கள், 9303 பவர் டில்லர்கள், 288 அறுவடை இயந்திரங்கள், 2868 விவசாய பிற கருவிகள் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 24.50 லட்சம் விவசாயிகளுக்கு 4,366 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 


கடந்த மூன்று ஆண்டு காலங்களில் வறட்சி பேரிடரால் 12.88 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர் பயிர் சேதங்களுக்கு ரூபாய் 582 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.


கரும்பு உற்பத்திக்கு ஊக்கத்தொகை, சிறப்பு உற்பத்தி தொகை, என ரூபாய் 651 கோடி  ரூபாய் 4.4 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகள் 27.5 கோடி செலவில் 100 உழவர் சந்தைகள் புரனமைக்கப்பட்டுள்ளது.  10 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஏற்கனவே உள்ள 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.


71 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை கடனாக 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகி உழவர்கள் பயனடைகின்றனர். தமிழ்நாடும் உணவு உற்பத்தியில் முன்னேறி உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக சாதனை படைத்ததாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்