சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Aug 15, 2024,09:17 AM IST

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவின்போது தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.


இந்தியாவின் 78வது சுந்திர தின விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்த விழாவில் ஆட்சித் தலைவர்கள் கொடியேற்றினர். சென்னையில் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார்.


முன்னதாக முப்படைத் தளபதிகளுக்கு அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதன் பின்னர் அலங்கார ஜீப்பில் பயணித்தபடி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின்னர் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  அதன் பின்னர் திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமாக விவரித்து உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின். தனது பேச்சின்போது சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளையும் அவர் நினைவு கூர்ந்தார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு திமுக அரசுகள் செய்த சேவைகளையும் அவர் விவரித்தார்.


இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.




சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு வழங்கிய விருதுகள்:


சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதில் முக்கியமாக மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருது வழங்கப்பட்டது. முதல்வர் அளித்த விருதுகள் மற்றும் அதைப் பெற்றோர் விவரம்:


தகைசால் விருது - காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன்

கல்பனா சாவ்லா விருது - கூடலூர் செவிலியர் சபீனா

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது - சந்திரயான் 3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல்.


மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சி - கோயம்பத்தூர்

மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சி மண்டலம் - சென்னை மாநகராட்சியின் 14வது மண்டலம்

மாநிலத்திலேயே சிறந்த நகராட்சி - திருவாரூர்

மாநிலத்திலேயே சிறந்த பேரூராட்சி - சூலூர்


நல்லாளுமை விருதுகள்:




நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முறைகளில் புதுமைப் புகுத்திய - தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர் இன்னசெண்ட் திவ்யா


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்த - தலைமை தொழில் நுட்ப அலுவலர் முதல்வரின் முகவரித் துறை - வனிதா


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தாய்மார்களை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்களை கொண்டு சிறப்பாக செயல்படுத்திய - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யதர்சினி


உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்திய - விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன்


சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சிகளின் வாயிலாக தமிழ் இலக்கிய படைப்புகளை உலக மொழிகளுக்கு எடுத்துச் செல்லவும், உலகின் சிறந்த நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் வழிவகை செய்த - பொது நூலகங்கள் துறை இயக்குநர் இளம்பகவத்


மூளைச்ச்சாவடைந்த நபர்களிடம் இருந்து உறுப்புக் கொடை பெற்று நடத்தப்படும் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திவரும் - தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம், உறுப்பினர் செயலர் மருத்துவர் கோபால கிருஷ்ணன்


மேற்கண்ட 6 பேருக்கும் பாராட்டு சான்றிதழுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கி முதல்வர் கெளரவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்