ஈரோடு: தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் மக்களை முழுமையாக சென்று அடைகிறதா என்பதை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் ஈரோட்டில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் செயல்படுத்தக்கூடிய நல திட்டங்கள் அனைத்தும் மக்களை முழுதாக சென்றடைகிறதா என்பது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இதன்பிறகு கட்சி பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதன்படி தற்போது மாவட்ட வாரியாக அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த நவம்பர் 5, 6 தேதிகளில் முதன் முதலாக கோவைக்குச் சென்று அங்கு கள ஆய்வுப் பணிகளை தொடங்கினார். அப்போது சென்னையில் அண்ணா பெயரில் நூலகமும், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைந்திருப்பதுபோல, கோவையில் மிகப் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் தந்தை பெரியார் பெயரில் அமைக்கப்படும். 2026 ஜனவரியில் நூலகமும் அறிவியல் மையமும் திறக்கப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கலிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஈரோடு செல்கிறார். இதற்காக இன்று காலை ஈரோட்டுக்கு அவர் புறப்பட்டுச் செல்கிறார்.
ஈரோடு வந்ததும், மதியம் ஒரு மணி அளவில் காளிங்கராயன் இல்லம் செல்கிறார். பிறகு மாலை 5 மணிக்கு தங்கம் மஹாலில் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வர் கலந்து கொண்டு பேச இருக்கிறார். இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் முத்து மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிறகு இரவு காளிங்கராயன் இல்லத்தில் தங்குகிறார்.
மறுநாள் காலை 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சோலார் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கியும் வைக்கிறார். தமிழ்நாடு அரசு சார்பில் 50,088 பேருக்கு சுமார் ரூ.284 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி முடித்த பிறகு காலை 11 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பி மதியம் 2 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைவார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!
விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!
ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!
வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}