சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
தமிழக அரசின் உயர்கல்வி துறையின் கீழ் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப் பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநர் ஆர். என் ரவி செயல்பட்டு வந்தார். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பொறுப்புகளை கவனித்து வந்தார். இதன் அடிப்படையில் ஆளுநர் தமிழக உயர்கல்வித்துறையில் நேரடியாக தலையிட்டு துணைவேந்தர்களை நியமிக்காமலும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை நடத்தாமலும் இருந்து வந்தார்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்யாமல், மாநில அரசே நியமிப்பதற்கான புதிய சட்ட மசோதா சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

இதனையடுத்து தமிழக அரசு துணைவேந்தர்கள் நியமனம் உட்பட பத்து மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டதாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.அதில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதற்கு அதிகாரம் இல்லை. குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் செல்லாது. ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என காலக்கெடு விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அந்தஸ்தை பயன்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதுவரை நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அதில் துணைவேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு மாற்றிய சட்டம் அமலுக்கு வந்தது நினைவிருக்கலாம். இதன் மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் பல்கலைக்கழக வேந்தர் ஆனார்.
இந்த நிலையில் முதல் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}