சென்னை: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க நாளை முதல் தனது அமெரிக்க பயணத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு க ஸ்டாலின். 27 ஆம் தேதி அமெரிக்காவுக்குப் புறப்படும் முதல்வர் அங்கு 17 நாட்கள் தங்கி இருந்து பின்னர் மீண்டும் செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்த தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் அரசு முறை பயணமாக முதல்வர் சென்று வருகிறார்.அங்கு அந்நாட்டு பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அழைப்பு விடுத்தும் வருகிறார்.
.jpg)
கடந்த மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது ஒன்பது லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளைக் கவருவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.
முதல்வரின் 17 நாட்கள் பயணத்திட்டம்..
நாளை அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 28-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். 31 ஆம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார் மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்க உள்ளார்.
செப்டம்பர் 2 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்டு சிகாகோ சென்று, அங்கு 12 ஆம் தேதி வரை தங்கி பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அப்போது பார்சூன் 500 பட்டியலில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
செப்டம்பர் 7 ஆம் தேதி அயலக தமிழர்களின் சந்திப்பு நிகழ்வில் முதல்வர் பங்கேற்கிறார். இதன் பின்னர் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, செப்டம்பர் 12ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
முதல்வரின் இந்த பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு நிறைய முதலீடுகள் கிடைக்கும் என தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}