CM MK Stalin visit: கோவையில் .. கள ஆய்வை இன்று தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Nov 05, 2024,10:48 AM IST

கோயம்பத்தூர்: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்று சேர்கிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். இதன் முதற்கட்டமாக இன்று கோவையில் தொடங்குகிறார்.


திமுக  பொறுப்பேற்றதிலிருந்து அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர் இலவச பேருந்து, மகளிர் உதவித் தொகை, நான் முதல்வன் திட்டம், மானிய விலையில் சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக. இத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் இத்திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முழுமையாக சென்று சேர்ந்ததா என்ற கள ஆய்வு பணியை மாவட்ட வாரியாக முதல்வர் மு க ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கிறார். இதன் முதற்கட்டமாக கள ஆய்வு பணியை கோவையில் இருந்து தொடங்குகிறார்.




இதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படுகிறார். இதனைத் தொடர்ந்து  கோவை விமான நிலையத்திற்கு வரும் முதல்வருக்கு அமைச்சர்கள், திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் இன்றும் நாளையும் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளனர். 


அதன்படி  விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் ஐ டி வளாகம் 3.04 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்களுடன் ரூபாய் 114.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஐடி வளாகத்தை இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி அளவில் சுகுணா திருமண மண்டபத்தில் வீட்டு வசதி சார்பில் நில எடுப்பு நடவடிக்கைகளில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆனைகளை வழங்க உள்ளார். 


பின்னர் 4 மணியளவில் சிவாலய திருமண மண்டபத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துரையாட இருக்கிறார். அப்போது தங்க நகை தொழிலில் உள்ள பிரச்சனைகளை கேட்டு அறியவும் உள்ளார். இதன் பின்னர் போத்தனூரில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கவும் இருக்கிறார். 


இதனை முடித்துவிட்டு இன்று இரவு அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை காலை 9 மணி அளவில் சிறைச்சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்காவையும் முதல்வர் பார்வையிட இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு விமானம்  மூலம் புறப்பட்டு செல்கிறார். 


இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக இன்று கோவை வரும் முதல்வருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்