சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் இன்று ஜாமின் வழங்கியுள்ளது. இதையடுத்து திமுகவினர் இதை பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது என்று முதல்வர் தெரிவித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு மேற்கு மண்டலத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைக்க செந்தில் பாலாஜியின் கடுமையான உழைப்பே காரணம். இதன் காரணமாக செந்தில் பாலாஜிக்கு முதல்வரிடம் செல்வாக்கு அதிகரித்தது. இந்தச் சூழ்நிலையில்தான் அவர் கைதாகி சிறைக்குப் போய் விட்டார் என்பது நினைவிருக்கலாம். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், செந்தில் பாலாஜி விடுதலையாகி வெளியே வருவதால் மேற்கு மண்டல திமுகவுக்கும் இது பலன் தரும் என்று கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}