இவர்கள் பிரிந்து விட மாட்டார்களா என ஏங்கிய எதிரிகளின் கனவு தூளானது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Mar 05, 2026,04:55 PM IST
சென்னை: அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம். நம் பயணத்தி ல் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து,  உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களின் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திருச்சியில் நடைபெறவுள்ள கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,  

தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைக்க உறுதி எடுத்துக் களம் காண்போம். 
பத்து இலட்சம் கழக நிர்வாகிகள் கூடுகின்ற பெருவிழாவாகத் திருச்சி சிறுகனூரில் மார்ச் 9 அன்று கழக மாநாடு நடைபெறவிருக்கிறது. மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளேன். திருச்சியில் மாநாடு என்றாலே கழகத்தின் வரலாற்றில் திருப்புமுனை தான்.



நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு என்று நான் எப்போதும் கூறுவதற்கேற்ப, இப்போதும் மாநாட்டுப் பணிகளை சிகச் சிறப்பாக அவர் மேற்கொண்டு வருகிறார். முத்தமிழறிஞர் கலைஞர் இருந்திருந்தால், நேரு என்றால் மேரு. உடன்பிறப்பே., திருச்சியை நோக்கி முன்னேறு என்று அழைத்திருப்பார்.

அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம். நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து,  உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களின் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்.

மார்ச் 9 ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெறவிருக்கிற  திருச்சி சிறுகனூரில் தான். 2021ம் ஆண்டு தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது நான் வைத்த கோரிக்கை, தி.மு.கழகத்திற்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆள்கின்ற வாய்ப்பைத் தாருங்கள். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம் என்பது தான்.

தொடர் பயணத்திற்கும், தடையில்லா வளர்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்திற்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?

news

திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்

news

கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி

news

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்

news

Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!

news

வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!

news

சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !

news

எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!

news

The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!

அதிகம் பார்க்கும் செய்திகள்