புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது மாநிலத்தைச் சேர்ந்த 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா 500 கிலோ இனிப்பு மற்றும் 500 வெடி பாக்ஸ் வாரி வழங்குகிறார்.
தீபாவளியை முன்னிட்டு போனஸ் மற்றும் பல்வேறு விதமான பரிசு பெருட்களை வழங்கி வருவது வழக்கம். அப்படித்தான் புதுச்சேரி முதல்வரும் தனது மாநிலத்தைச் சேர்ந்த 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் பரிசு பொருட்களை வாரி வழங்குகிறார்.
புதுச்சேரியில் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்குப் பதில் ரூ.490 வழங்கப்பட்டது. 10 கிலோ அரிசி 2 கிலோ சர்க்கரைக்குப் பதில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவித்தது அரசு.
தீபாவளிக்கு சிறப்பு பரிசு பொதுமக்களுக்கு மட்டும் இல்லை. புதுச்சேரியில் உள்ள 33 எம்.எல்.ஏக்களுக்கும் தலா 500 பட்டாசு பெட்டிகளும், 500 கிலோ இனிப்பும் பரிசாக முதல்வர் ரங்கசாமி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதைக் கேட்டு புதுச்சேரி எம்எல்ஏக்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். எம்எல்ஏக்கள் தங்களைப் பார்க்க வரும் தொண்டர்களுக்கு இந்த ஸ்வீட் பாக்ஸ்களையும், பட்டாசுகளையும் கொடுப்பதற்கு வசதியாகவே முதல்வர் ரங்கசாமி இப்படி கொடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையிலேயே இது செம முடிவுதான். கண்டிப்பாக தீபாவளிக்கு முன்பாக அமைச்சர்கள், எம்எல்ஏக்களைப் பார்க்க பலரும் வருவார்கள். அவர்களை வெறும் கையுடன் அனுப்பவும் முடியாது. எனவே அவர்களுக்கு இந்த ஸ்வீட் பாக்ஸ், பட்டாசுகள் மிகவும் கை கொடுக்கும் என்பதால் பலரும் முதல்வரின் இந்த சர்ப்பிரைஸ் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}