கல்வி உதவித்தொகைக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்துக : பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Dec 10, 2024,04:43 PM IST

சென்னை: கல்வி உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக  உயர்த்த கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்,பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை ஒன்றிய அரசு 8 லட்ச ரூபாயாக மாற்றியமைத்துள்ளதையும், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக் கல்வி திட்டம் போன்றவற்றில் வருமான உச்ச வரம்பு 8 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதன் காரணமாக பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.



அகில இந்திய உயர்கல்வி ஆய்வு தரவுகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் மற்ற மாணவர்களைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்துள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்கு தேவையான வசதிகளை செய்து தருவது மிகவும் அவசியமானது என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மெட்ரிக் படிப்புக்கு முந்தையம் மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க கணிசமான பங்களிக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பிற்கு ஏற்ப இப்பிரிவினர்களுக்கான உதவித்தொகை காண ஆண்டு வருமான உச்ச வரம்பினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினால், இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விவகாரங்களில் இந்திய பிரதமர் அவர்கள் தலையிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக்படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக்கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்திவ் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்ச வரம்பினை 2.50 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உடனடியாக உயர்த்தி நீர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்