கோயம்பத்தூர்: கோயம்பத்தூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பத்தூர் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் மேயராக 19வது வார்டு கவுன்சிலரான கல்பனா தேர்வு செய்யப்பட்டார். கோயம்பத்தூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
இந்த நிலையில் அவர் மீது பல்வேறு அதிருப்திகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தனது பதவியை கல்பனா ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்போது புதிய மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு இன்று நடந்தது. அதில் ரங்கநாயகி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 29வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரங்கநாயகி, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கோயம்பத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரைத் தேர்வு செய்வார்கள். திமுகவுக்கே அதிக அளவிலான கவுன்சிலர்கள் இருப்பதால் ரங்கநாயகி மேயராகிறார்.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை ஆளும் திமுக கூட்டணி வென்றது. அதில் திமுக 76 வார்டுகளிலும், காங்கிரஸ் 9, சிபிஐ 4, சிபிஎம் 4, மதிமுக 3 வார்டுகளிலும் வென்றன. அதிமுக கூட்டணிக்கு 4 இடங்களில் வெற்றி கிடைத்தது. அதில் அதிமுகவுக்கு 3 வார்டுகளும், எஎஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு வார்டும் கிடைத்தன என்பது நினைவிருக்கலாம்.
கோயம்பத்தூர் மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் தமாகாவைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன். 1996 முதல் 2001 வரை இவர் மேயர் பதவி வகித்தார். அடுத்து அதிமுகைச் சேர்ந்த தா. மலரவன் மேயரானார். 3வது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர். வெங்கடாச்சலம். இவர்தான் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் ஆவார். அதன் பின்னர் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.எம். வேலுச்சாமி, கணபதி ராஜ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து மேயர்களாக இருந்தனர். 6வது மேயராக இருந்தவர் கல்பனா. தற்போது 7வது மேயராக ரங்கநாயகி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}