கோயம்புத்தூர்: தமிழகத்திலேயே மிகப்பெரிய அதி நவீன டெக்னாலஜி வசதிகளுடன் கூடிய திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம் கோயமுத்தூரில் திறக்கப்பட்டுள்ளது.
இத்திரையரங்கத்தினை பார்வையிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, திரையரங்கு உரிமையாளர் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும் மிகச்சிறந்த ஒலி அமைப்பும் புதுமையான வகையில் உயர்தரத்திலான இருக்கை வசதிகளுடன் கூடிய கோல்ட் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதனுடன் 6 வழக்கமான திரைகளும் அமைந்துள்ளது.

ரசிகர்களும், திரைக்காதலர்களும் வியந்து பார்க்கும் வகையிலான, இந்த மல்டிப்ளெக்ஸ் பிராட்வே திரையரங்கினை பார்த்துப் பிரமித்த, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி அவர்கள், திரையரங்க உரிமையாளர் சதீஷ்குமாரை நேரில் சந்தித்து, பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மேனேஜர் சுப்பு உடனிருந்தார்.
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}