கோயம்புத்தூர்: கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கருமத்தம்பட்டி உள்கோட்டத்திற்குட்பட்ட சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் கார்த்தி (35) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மோகன் (31) ஆகிய இருவர் மீதும் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர்கள் "பாலியல் குற்றவாளிகள்" என்பதை உறுதிசெய்து, அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி, போக்சோ வழக்கில் கைதான கார்த்தி (35) மற்றும் மோகன் (31) ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தாலோ அல்லது பொது சுகாதாரப் பராமரிப்பிற்குத் தீங்கான செயல்களில் ஈடுபட்டாலோ, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
தங்கள் பகுதிகளில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 94981-81212 என்ற எண்ணிற்கும், 7708-100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}