"படிச்சுப் படிச்சு வெளாடுவோமா?".. முத்துக்காளை பையில் 3 டிகிரி.. மிகப் பெரிய Motivation!

Dec 25, 2023,05:09 PM IST

சென்னை: நகைச்சுவை நடிகர் முத்துக்காளை மிகப் பெரிய மோட்டிவேஷனல் மனிதராக உருவெடுத்துள்ளார். குடித்துக் குடித்து சீரழிந்த நிலைக்குப் போய்க் கொண்டிருந்த அவர், இன்று அந்தப் பழக்கத்தை தூக்கித் தூரப் போட்டு விட்டு படித்துப் படித்து வியக்க வைத்து வருகிறார்.


இதுவரை 2  பட்டங்களைப் பெற்றுள்ள முத்துக்காளை இப்போது 3வது பட்டத்தையும் பெற்று அசத்தியுள்ளார். பி.லிட் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறார் முத்துக்காளை.


நகைச்சுவை நடிகர் முத்துக்காளை ராஜபாளையத்தில் பிறந்தவர். மிகப் பெரிய கனவுகளுடன் சினிமாவுக்கு வந்தவர். சண்டை பயிற்சியாளராக வரவேண்டும் என ஆசைப்பட்டார். இதனால் கராத்தேவில் சேர்ந்து பிளாக் பெல்ட் பெற்றார். 


ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களே கிடைத்தன. இந்த நிலையில்தான் விதி விளையாடியது.. ஸ்டண்ட்மேனாக வலம் வந்து கொண்டிருந்த அவர்,  1997 ஆம் ஆண்டு வெளியான பொன்மனம் என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் நகைச்சுவை வேடங்களே வர ஆரம்பித்தன. அவரும் விடவில்லை. 




வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்த நகைச்சுவை மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். வடிவேலு - முத்துக்காளை காமெடிக் காட்சிகள் இன்று வரை சிலாகித்து ரசிக்கக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக செத்து செத்து விளையாடுவோமா காமெடியைப் பார்த்து சிரிக்காத வாயே இருக்க முடியாது.. அதேபோல கோழி 65 காமெடியும் கலகலப்பூட்டக் கூடியது.


சினிமாவில் பிசியாக இருந்த காலத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார் முத்துக்காளை. இது அவரது உடல் நலனையும் கெரியரையும் பாதிக்கும் அளவுக்குக் கொண்டு போய் விட்டது. அதன் பின்னர் நல்லவர்கள் சிலரின் அறிவுரையால் குடியிலிருந்து திரும்பி, திருந்தி, படிப்புக்குக் திரும்பினார் முத்துக்காளை. படிக்க ஆரம்பித்தார்.. விடாமல் படிக்க ஆரம்பித்தார்.. இதன் விளைவு இப்போது 3வது டிகிரிக்கு வந்து விட்டார்.


ஏற்கனவே  தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டில் பிஏ ஹிஸ்ட்ரியில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கினார். 2019ல் எம்.ஏ தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார். இப்போது பி.லிட் முடித்து விட்டார்.


ஒரு பட்டதாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்த நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தற்போது மூன்று பட்டங்களுக்கு சொந்தக்காரராக விளங்குகிறார். தனது கனவு நிறைவேறியது மகிழ்ச்சியே என கூறியுள்ளார் .இதற்கு நண்பர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


குடிக்கு அடிமையாகி வாழ்க்கை வீணாகியிருந்தால்.. அப்போது முத்துக்காளையைப் பார்த்து பலரும் உச்சு கொட்டி பரிதாபப்பட்டிருப்பார்கள்.. ஆனால் அதிலிருந்து மீண்டு இவர் எல்லோரும் உயர்ந்து பார்க்கும் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார் என்பதுதான் சாதனையே.. என்னால் படிப்பை தொடர முடியலையே என்று புலம்புவது அந்த காலம். கல்வி கற்க வயது வரம்பு என்பதே கிடையாது. நாம் விரும்பும் வயதில் எப்போது வேண்டுமானாலும் கற்று தேர்ச்சி பெறலாம். உங்களுக்கும் படிக்க வேண்டும் என்ற கனவு உள்ளதா.. முத்துகாளை போல.. நீங்களும் முயற்சி செய்து கனவை வெற்றி அடையச் செய்யுங்கள்.. வாழ்த்துக்கள்..!!

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்