மயிலாடுதுறையில் மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர். சுதா போட்டி.. காங்கிரஸ் அறிவிப்பு

Mar 26, 2024,09:37 PM IST

சென்னை: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஆர். சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். 


ஆர். சுதா தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.


தமிழ்நாட்டில், திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே. கோபிநாத், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கடலூர் தொகுதியில்  எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், திருநெல்வேலியில்  ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடவுள்ளனர்.




அதேபோல விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் டாக்டர் தாரகை போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிட கடும் போட்டி நிலவி வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர்களான திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டனர். இந்த நிலையில் நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள சூழலில் இன்று இரவு மயிலாடுதுறை வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.


அதன்படி  ஆர் சுதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.  வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நாளை ஆர்.சுதா தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.


காங்கிரஸ் வேட்பாளர்கள் 10 பேரில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கு. அதேபோல விளவங்கோட்டிலும் பெண்ணையே வேட்பாளராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்